மல்லிகை நிறுவனம் உறுவான விதம்
மல்லிகை நிறுவனம் 2002-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகே வெள்ளகோவில் என்ற சிறிய ஊரில் இயற்கை ஆர்வலர் N. மணிவேல் அவர்களால் தொடங்கப்பட்டது.
உலகில் எல்லா உயிரினங்களும் முதுமை அடைந்து இறக்கும் வரை சுயமாகவே வாழ்கின்றன அவைகளுக்கு பற்கள் விழுவது இல்லை, இறகுகள் உதிர்வதில்லை, கால்களுக்கு வலி வருவதில்லை, அடுத்த சந்தததிகள் ஊமையாகவோ கண் பார்வையற்றோ, காது கேட்காமலோ வலிமை இழந்தோ பிறப்பது இல்லை. பல நூறு ஆண்டுகளாக அவை ஆரோக்யமாகவே வாழ்கின்றன காரணம் மாறா உணவு பழக்கம்
18-ம் நூற்றாண்டு வரை மனித இனமும் மற்ற உயிரினங்கள் போலவே ஆரோக்யமாகவே இருந்தான் 19, 20-ம் நூற்றாண்டுகளில் இயந்திரமயம், நாகரிக வளர்ச்சி, செயற்கை உணவுகள், உழைப்பின்மை, தவறான உணவு பழக்க வளக்கங்கள் இன்று வியாதியே இல்லாத மனிதனே இல்லை என்ற நிலை. ராஜாக்கள் ஆண்ட காலத்தில் 50-வயது தான் இளமையின் உச்சம். என்ற நிலை மாறி தற்போது 25-வயது தான் வாலிபம் என்ற மன நிலைக்கு வந்துவிட்டோம்.
ஏன் மனிதனுக்கு வியாதிகள் வருகிறது முதுமையில் செயல்பட முடிவதில்லை இவ்வாறு சிந்தித்த மணிவேல் அவர்கள் இந்தியா முழுவதும் பயணம் செய்தார் இந்தியாக்களின் உணவு பழக்கம் மூலிகைகளின் சக்தி, சித்த வைத்தியம், நாட்டு வைத்தியம் பலவற்றை ஆராய்ந்தார் கடைசியாய் அந்த அந்த பகுதியில் விளையும் உணவுப்பொருள்கள் அங்கே வாழும் மனிதனுக்கு உகந்தவை என்றும் மனிதனின் முதுமை வியாதிகள் தற்கால தவறான உணவு பழகங்களாலேயே ஏற்படுகின்றது என்று அறிந்தார், சுவாசம் சரியானால் வயது 100-ஆகும் என்பது அவரின் அருள்மொழி
” விண்ணை அளந்து சந்திரனை கண்டோம்
செவ்வாயும் காண்போம் – சூரியனையும் நெருங்குவோம்
மண்ணைப் பிளந்து தங்கம், வெள்ளி, வைரம் எடுத்தோம்
நொடியில் உலகை அழிக்க அணு ஆயுதம் செய்தோம்
இறந்தவன் பிழைக்க மருந்தும் காண்போம்
ஆனால்….? உண்ணும் உணவு ஏதென்று அறியோம்?”
கோடி கோடியாய் பணம் இருப்பவர்கள் கூட நல்ல உணவு சாப்பிடுவது இல்லை ஆடம்பர பெருமைக்கே சாப்பிடுகிறார்கள் என்பது அவரின் கருத்து மக்களுக்கு நல்ல உணவு பொருள்களை கொடுக்க வேண்டும். என்ற என்னத்தால் 20– ஆண்டுக்கு முன் மல்லிகை நிறுவனத்தை உறுவாக்கினார் 20-ஆண்டுகள் பல மொழிகள் பல மாநிலங்கள் என்று எந்த விளம்பரம் முயற்சியும் இல்லாமலேயே சாப்பிட்டு மகிழ்ந்த மக்களாலே இந்தியா முழுவதும் பரவியது இன்று மிகப்பெறிய இயற்கை உணவு பொருள் தயாரிக்கும் நிறுவனமாக திகழ்கிறது.
நீங்களும் அனுபவித்து ருசியுங்கள் சுவையையும் ஆரோக்யத்தையும் அறியுங்கள் மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.